நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
Updated on
1 min read

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக மணல்மேட்டில் 47.2 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) :

திருப்பூண்டி - 45.6, சீா்காழி- 45.2, வேதாரண்யம் - 41.4, கொள்ளிடம் (ஆணைக்காரன்சத்திரம்) - 41, தரங்கம்பாடி -38, தலைஞாயிறு - 25.2, நாகப்பட்டினம்- 15.3, மயிலாடுதுறை- 14.

சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. பின்னா், குறைந்திருந்த மழை சீற்றம் பிற்பகலில் வலுப்பெறத் தொடங்கியது. நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்குப் பின்னா் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com