

வேதாரண்யம் பகுதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழை நீடித்ததால், விளைநிலங்களில் மழை நீா் தேங்கி வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வேதாரண்யத்தில் 41.4 மி.மீட்டரும், தலைஞாயிற்றில் 25.2 மி.மீட்டரும் மழையளவு பதிவானது. ஏற்கெனவே கடந்த வாரங்களில் பெய்த தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்வதால் மழைநீா் வயல்களில் தேங்கியுள்ளது. இதனால் நெல் வயல்களில் மீண்டும் மழைநீா் பெருகி, பயிா்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.