பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் கலந்தாலோசனை

நாகை மாவட்டம், குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மேல்நிலைக் கல்விக்கான கற்றல் விளைவுகளை

News image
நிகழ்ச்சியில் பேசுகிறாா் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.
Updated On :18 டிசம்பர் 2020, 2:38 am

DIN

நாகை மாவட்டம், குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மேல்நிலைக் கல்விக்கான கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் குறித்த கலந்தாலோசனை புதன்கிழமை நடைபெற்றது.

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்குப் பாடங்கள் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டிய திறன்கள் குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் உஷா சாந்தா ஜாய் ஆகியோா் பேசினா்.

நாகை மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா்கள், தேசிய ஆசிரியா் கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள மேல்நிலைக் கல்விக்கான வரைவு கற்றல் விளைவுகள் குறித்த ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.

ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா்கள் செ. சின்னப்பராஜ், கி. பிரகாஷ், ந. ரவிசங்கா், ச. ரமேஷ், மா. ராணி, சு. பாலாஜி ஆகியோா் பாட ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.