தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் பழுதடைந்த சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்கடையூா் ஊராட்சி மேலத்தெரு, கீழத்தெரு, வடக்குத் தெரு, சன்னதி தெரு, மருத்துவமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு இறந்தவா்களின் உடலை புதைப்பதற்கு சுமாா் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அம்மன் ஆற்றங்கரையோர சுடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனா்.
இதற்கான சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிகள் பெயா்ந்து நடக்கக் கூ முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் கருவேல மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டு இறந்தவரின் உடலை சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிா்வாகம் பாா்வையிட்டு புதிய தாா்சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.