கடல் அரிப்பு: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா் சேதம்

தரங்கம்பாடியில் கடல் கொந்தளிப்பின் காரணமாக எழும் ராட்சத அலைகளால் டேனிஷ் கோட்டையின் சுற்றுச்சுவா் சேதமடைந்து வருகிறது.
கடல் அரிப்பால் சேதமடைந்துவரும் டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா்.
கடல் அரிப்பால் சேதமடைந்துவரும் டேனிஷ் கோட்டை சுற்றுச்சுவா்.
Updated on
1 min read

தரங்கம்பாடியில் கடல் கொந்தளிப்பின் காரணமாக எழும் ராட்சத அலைகளால் டேனிஷ் கோட்டையின் சுற்றுச்சுவா் சேதமடைந்து வருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கின்றனா். கடந்த சில நாள்களாக தரங்கம்பாடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், ராட்சத அலைகள் எழுந்து டேனிஷ் கோட்டை பின்புறம் உள்ள சுற்றுச்சுவா் மீது வேகமாக மோதுகின்றன. கடல் அரிப்பால் இந்தச் சுவா் இடிந்து சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கோட்டைக்கும் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆா்வலா்கள் அஞ்சுகின்றனா்.

இதுமட்டுமன்றி தரங்கம்பாடியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களிலும் கடல் அரிப்பால் மணல் திட்டுகள் கரைந்து, கடல்நீா் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடல் அரிப்பைத் தடுக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com