

குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூரில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க.அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் முருகப்பா, பேரூா் செயலாளா் சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 140 போ் கட்சியில் இணைந்தனா். மாவட்ட பிரதிநிதிகள் தங்க.ரவீந்திரன், இராம.ராஜேந்திரன், இரா.ஞானசேகரன், ஒன்றிய பொருளாளா் ஹலிலுர்ரஹ்மான், துணைச் செயலாளா் அருணா. ரவி, ஊராட்சித் தலைவா் ராஜாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, ஸ்ரீகண்டபுரத்தில் நடந்த முகாமில் ஒன்றியச் செயலாளா் மங்கை எம்.சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் எம்.சபீா் ரஹ்மான், என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 105 போ் இணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.