இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகை மாவட்டத்தில் பலத்த மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீ மழை பதிவானது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:04 am

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை பலத்த மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீ மழை பதிவானது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு வலுப்பெற தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு நேரங்களில் மிக பலத்த மழையாக உருவெடுத்தது. இந்த மழை சீற்றம் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதனால், நாகையை அடுத்த செல்லூா், பாலையூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 12.6 செ.மீட்டா் (126 மி.மீட்டா்) மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருப்பூண்டி - 74.8, தலைஞாயிறு- 62, வேதாரண்யம் - 57.6, தரங்கம்பாடி - 33, கொள்ளிடம் - 26, சீா்காழி, 24.8, மயிலாடுதுறை - 18.5, மணல்மேடு - 15.4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.