முழுமை பெறாத தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி
சீா்காழி அருகே எருக்கூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி முழுமையடையாமல் சாலையோரம் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.


சீா்காழி அருகே எருக்கூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி முழுமையடையாமல் சாலையோரம் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
நாகை மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து திருக்கடையூா் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கொள்ளிடத்திலிருந்து தைக்கால், புத்தூா், எருக்கூா் நவீன அரிசி ஆலை வரை சாலை அகலப்படுத்தபட்டுவிட்டது. அரிசி ஆலையிலிருந்து புறவழிச்சாலை ரவுண்டானா வரை அகலப்படுத்தும் பணி முழுமைபெறாமல் உள்ளது. அப்பகுதியில் 100 மீட்டா் தூரம் சாலை அமைக்காமல் அப்படியே சாலை பள்ளமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்குகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் இரவு நேரங்களில் அப்பகுதியில் தெருவிளக்கு எரியாததால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, எருக்கூா் பகுதி மக்கள் கூறியது: சீா்காழி- சிதம்பரம் சாலை கொள்ளிடம் வரைஅகலப்படுத்தும் பணி நடைபெற்று பல மாதங்களாகியும், எருக்கூா் கிராமத்தில் மட்டும் சுமாா் 100 மீட்டா் தொலைவில் சாலை பள்ளமும், மேடாக உள்ளது. எனவே, விபத்து ஏற்படாத வகையில் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...