ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சீர்காழியில் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது 

சீர்காழியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
சீர்காழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated On :21 டிசம்பர் 2020, 9:14 am

DIN

சீர்காழியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முன்னாள் சீர்காழி நகர மன்ற தலைவரும் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளருமான கணிவண்ணன் தலைமை வகித்தார். நகர தலைவர் லட்சுமணன் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம் பாலகுரு பாலசுப்பிரமணியன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். 

இதில் பங்கேற்ற காங்கிரஸார் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கையில் ஏர் கலப்பை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏர் கலப்பையுடன் பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் பெண்கள் உட்பட 166 பேரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இதில் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரத் சந்திரன் சிவப்பிரகாசம் குமார் பட்டேல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சிவராமன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர் மாவட்ட பொது செயலாளர்கள் சுப்பராயன், சந்திரசேகர், தியாக கார்த்திகேயன் மாவட்ட ஓபிசி அணி தலைவர் அன்பு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரியகுமார் செல்லத் செந்தில்குமார் பால முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.