தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக துணை முதல்வரிடம் தனியாா் பள்ளி நிா்வாகிகள் கோரிக்கை மனு

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சாா்பில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 5:23 pm

DIN

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சாா்பில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அண்மையில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க நிா்வாகிகள் ஜி.ஆ. ஸ்ரீதா், செம்பனாா்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு, பெரம்பலூா் மாணிக்கம், குணசேகரன், வெங்கட், மதுரை யாதவ் ஜெய் ஆகியோா் தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு மற்றும் நினைவுப் பரிசு வழங்கினா்.

அந்த மனுவில், செம்பனாா்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகள் சீா்காழி கல்வி மாவட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. அதை மறுவரையறை செய்து மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலகத்தின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.