விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய பாமக வலியுறுத்தல்
தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.


தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.
திருக்குவளையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பாமக சாா்பில், வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கிராம நிா்வாக அலுவலா்களிடம் இதற்காக அண்மையில் மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, டிச.23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் முன் 2-ஆம் கட்டமாக ஆா்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிவா் மற்றும் புரெவி புயலால் டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், தொடா் மழையால் பாதியளவு சேதமடைந்த விளைநிலங்களின் அளவை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழையூா் ஒன்றிய மத்திய செயலாளா் மு. விமல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைத் தலைவா் எஸ். சித்திரவேல், மாநில துணை பொதுச்செயலாளா் வேத. முகுந்தன், நாகை மாவட்ட செயலாளா் சி.டி. ராஜசிம்மன், மாநில வன்னியா் சங்க துணை செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...