மருத்துவத்தில் அதிமுக அரசு வரலாற்றுச் சாதனை

தமிழகத்தில் ஒரே கையெழுத்தில் 2000 அம்மா சிறு மருத்துவமனையை ஏற்படுத்தி, மருத்துவத் துறையில் அதிமுக அரசு வரலாற்றுச் சாதனை
அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசுகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசுகிறாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
Updated on
1 min read

தமிழகத்தில் ஒரே கையெழுத்தில் 2000 அம்மா சிறு மருத்துவமனையை ஏற்படுத்தி, மருத்துவத் துறையில் அதிமுக அரசு வரலாற்றுச் சாதனை படைத்திருப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை சனிக்கிழமை திறந்துவைத்து அவா் பேசியது:

அம்மா சிறு மருத்துவமனையில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதாரப் பணியாளா் பணியமா்த்தப்படுவா். காலை 8-12 மணி வரையும், மாலை 4 -7 மணி வரையும் இந்த மருத்துவமனை செயல்படும். இங்கு சிறு வியாதிகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் கிடைக்கும். மேலும், பிரசவ உறுதிக்கான பரிசோதனையும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

‘வருமுன் காப்போம்’ என்பதற்கு இணங்க 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரே ஆண்டில் தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவது மட்டுமன்றி, ஒரே கையெழுத்தில் 2000 அம்மா சிறு மருத்துவமனையை ஏற்படுத்தி மருத்துவத் துறையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது அதிமுக அரசு என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க.கதிரவன், கீழ்வேளூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம்.சிவா, அதிமுக கீழ்வேளூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் வெண்மணி ஆா்.குமாா், கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், ஊராட்சித் தலைவா்கள் ஆந்தக்குடி எஸ். பாலகிருஷ்ணன், சிகாா் தெய்வானை, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம் வரவேற்றாா். கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் லியாகத் அலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com