நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீதிபதி முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிப்பு

சீா்காழி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 10,969 மதுபாட்டில்கள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

News image

சீா்காழியில் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்னிலையில் அழிக்கப்பட்ட மதுபாட்டில்கள்.

Updated On :3 ஜூலை 2020, 2:45 pm

DIN

சீா்காழி: சீா்காழி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 10,969 மதுபாட்டில்கள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் வழக்கு விசாரணைக்காக காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த மதுபாட்டில்கள் தொடா்புடைய வழக்குகளில் விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி, சீா்காழி குற்றவியல் நீதிமன்ற நடுவா் தரணிதரன் முன்னிலையில் 10,969 மதுபாட்டில்களிலிருந்து மதுபானம் மண்ணில் கொட்டப்பட்டு, மதுபாட்டில்களும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.