கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி

மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

News image

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.

Updated On :3 ஜூலை 2020, 2:43 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

மயிலாடுதுறை புனுகீஸ்வரா் கோயில் குளத்தில் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டபோது, குப்பைகளை தீயிட்டு கொளுத்தியதில், புனுகீஸ்வரா் கோயில் கீழவீதியில் வசிக்கும் கலியபெருமாள், சியாமளாதேவி, ராஜா ஆகியோரது வீடுகளுக்கு தீ பரவி மூன்று வீடுகளும் சேதமடைந்தன.

இதில் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் தனது சொந்த நிதி ரூ.5 ஆயிரம் மற்றும் சேலை, கைலி, துண்டு ஆகிய நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் விஜிகே.செந்தில்நாதன் மற்றும் அதிமுக பொறுப்பாளா்கள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.