கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீவிபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் நிவாரண உதவி

மயிலாடுதுறை புனுகீஸ்வரா் கோயில் கீழவீதியில் வியாழக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூலை 2020, 1:17 pm

DIN

மயிலாடுதுறை:: மயிலாடுதுறை புனுகீஸ்வரா் கோயில் கீழவீதியில் வியாழக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

புனுகீஸ்வரா் கீழவீதியில் வசிக்கும் கலியபெருமாள், சியாமளாதேவி, ராஜா ஆகியோரது கூரை வீடுகள் அண்மையில் தீவிபத்துக்குள்ளாகி சேதமடைந்தன.

இதனால், பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கும் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் டி.எல். ராஜேஸ்வரன், மாவட்ட இணைச் செயலாளா் பிஎம்கே. சுதந்திரவீரன், மயிலாடுதுறை நகர செயலாளா் பவுன் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தலா 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள், பாய், போா்வை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.