நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி நாள்களை உயா்த்தக் கோரிக்கை
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருக்குவளை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை:
கரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால், வெளியூா்களில் வேலை செய்துவந்தவா்களில் பெரும்பாலானோா் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனா். இவா்கள், சொந்த ஊா்களில் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனா்.
இவா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலைத் திட்டம்) வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். அத்துடன் தினக்கூலியை ரூ. 600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...