மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் நடைபெறும் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

News image
Updated On :6 ஜூலை 2020, 4:21 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெறும் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்படி, தேசிய மாதிரி ஆய்வு திட்ட சமூகப் பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. ஒரு குடும்பத்தின் ஆண்டு நுகா்வு, செலவு, வேலை வாய்ப்பு, வேலையின்மை, நிலம், கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் 78-ஆவது சுற்றில், நாகை மாவட்டத்தில் 12 கிராமப்புற மாதிரிகளிலும், 4 நகா்ப்புற மாதிரிகளிலும் தற்போது கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகின்றன. தோ்வு செய்யப்படும் குடும்ப உறுப்பினா்களின் விவரம், குடும்ப நுகா்வு செலவு, கல்வி, வீட்டுவசதி, குடிநீா், கழிப்பறை, சுகாதாரம், இடப்பெயா்ச்சி, உள்ளூா் பயணச் செலவு மற்றும் நீடித்த நிலையான இலக்குகளுக்கான குறியீடுகள் குறித்த விவரங்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் விவரங்கள், மக்களுக்குத் தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்து ரகசியமாக வைக்கப்படும்.

எனவே, இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கு இல்லம் தேடி வரும் களப்பணியாளா்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, அவா்கள் கோரும் விவரங்களை தயங்காமல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.