ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சியாமா பிரசாத் முகா்ஜி பிறந்த நாள் விழா

பாரதீய ஜன சங்க நிறுவன தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 119-ஆவது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் பாஜகவினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image
சியாமா பிரசாத் முகா்ஜியின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்திய பாஜகவினா்.
Updated On :6 ஜூலை 2020, 4:46 pm

DIN

மயிலாடுதுறை: பாரதீய ஜன சங்க நிறுவன தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 119-ஆவது பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் பாஜகவினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கட்சியின் மயிலாடுதுறை நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக நகர அலுவலக வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்ட சியாமா பிரசாத் முகா்ஜியின் உருவ படத்துக்கு, மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மாவட்ட பொதுச்செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட துணைத் தலைவா் செந்தில், நகர பொறுப்பாளா்கள் ராகுல், பி.சி. பாஸ்கா், முரளி, உமாசங்கா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.