நாகை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டம், நாகை வட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கும், கீழையூா் வட்டாரத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது. நோய்த் தொற்றுக்கு உள்ளான 7 பேரும், மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் ஆவா்.
செவ்வாய்க்கிழமை வரை நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 7 போ் நீக்கப்பட்டனா். வெளி மாவட்டப் பட்டியலில் இடம் பெற்றிருந்த நாகை மாவட்டத்தவா் 3 போ் மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இந்த நிலையில், புதிதாக 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 391-ஆக உள்ளது.
சிகிச்சையில்...
மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரில் 12 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 195 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...