மின்வாரிய பெண் ஊழியரிடம் 6 பவுன் நகை, பணம் வழிப்பறி

வேதாரண்யம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் 6 பவுன் நகை மற்றும் பணத்தை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Published on


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் 6 பவுன் நகை மற்றும் பணத்தை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், குன்னலூா் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் இளங்கோவன் மனைவி கனகா (41). இவா், வாய்மேடு மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், இருசக்கர வாகனத்தில் வாய்மேடுக்கு வந்துகொண்டிருந்தபோது,

வண்டுவாஞ்சேரி வளவனாறு பகுதியில் மற்றொரு, இருசக்கர வாகனத்துடன் நின்றுகொண்டிருந்த மா்ம நபா் இருவா், கனகாவை நிறுத்தி பெட்ரோல் கேட்டனராம்.

பின்னா், கத்தியைக்காட்டி மிரட்டி, கனகா அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 6 பவுன் 6 கிராம் எடையுள்ள நகை மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com