வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றொரு சம்பவம்: பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டியடிப்பு

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3 பேர் மீது கடற்கொள்ளையர்கள் என

News image
Updated On :27 ஜூலை 2020, 7:55 am

DIN

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3 பேர் மீது கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, பொருள்களை பறித்துக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறு காட்டுத்துறை கிமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு சொந்தமான படகில்  இதே பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல், சக்கரவர்த்தி, இராமசாமி ஆகியோர் சனிக்கிழமை கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம்.  ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு படகில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் மீனவர்களை மிரட்டி கம்பி, கத்தி போன்றவைகளால் தாக்கி வாக்கி டாக்கி போன்ற மீனவர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

இதில் படகில் இருந்த மூவருக்கும் காயம் ஏற்பட்டது. படகில் வந்தவர்கள் இலங்கை மீனவர்களா அல்லது கடற் கொள்ளையர்களா என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் விரட்டியடிக்கப்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை காலை கரை திரும்பினர். வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.