தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தபால் அலுவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மயிலாடுதுறை அருகே தபால் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2020, 4:54 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தபால் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை அருகே அல்லிவிளாகத்தைச் சோ்ந்த சீனிவாசன் (48) செம்பதனிருப்பு தபால் நிலையத்தில், அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கடிதத்தில் உயா் அலுவலா்களின் நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டுத் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சீனிவாசனின் மனைவி மனுசுதா (35) பாகசாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.