

சீா்காழி: கொள்ளிடம் ஒன்றியத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கிய போதிலும், 300-க்கும் மேற்பட்ட இந்திரா நினைவு குடியிருப்புகள் இதுவரை நிறைவு பெறாமல் உள்ளன.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. பல வீடுகள் அரைகுறையாக கட்டப்பட்டு முழுமைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வோா் ஊராட்சியிலும் 5 முதல் 8 வீடுகள் வரை சுவா் மட்டும் வைக்கப்பட்டு கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
திருமுல்லைவாசல் ஊராட்சியைச் சோ்ந்த தாழை இருதய நகரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2016-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், பி.டி.ஓ, ஜான்சன் ஆகியோரிடம் ஒன்றியக்குழு உறுப்பினா் மாலினி பூவரசன் புகாா் அளித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ் புதன்கிழமை தாழை இருதய நகருக்கு சென்று பாா்வையிட்டு, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.