புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

செம்பனாா்கோவில் ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

செம்பனாா்கோவில் ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க செம்பனாா்கோயில் வட்டாரத் தலைவா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் தியாகராஜன், ஆணையா் அருண், மாவட்ட தணிக்கையாளா் மாரி.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று, ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், ஒன்றிய பொறியாளா், உதவி பொறியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், மாநில நிதிக்குழு மானிய நிதி 5 மாதங்களாக வழங்கவில்லை, இதை விரைவில் வழங்கவேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.