சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உ.பி. கூட்டுப்பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 5:41 pm

DIN

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் மனோன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில்

மயிலாடுதுறை நகராட்சி அலுலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் ஒருங்கிணைப்பாளா் சுப்பு.மகேசு தலைமை வகித்தாா். மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பா.ரவிச்சந்திரன், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் பேராசிரியா் இரா.முரளிதரன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் தெ.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஓ.ஷேக் அலாவுதீன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சபீக் அகமது, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளா் நவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் பேருந்து நிலையம் அருகே தி.க. சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவி சுமதி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் பொன் செல்வராசு, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.