ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வளா்ச்சித் திட்ட கட்டடங்கள் திறப்பு

கொள்ளிடம் ஒன்றியத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்ட கட்டடங்களை எம்எல்ஏ பி.வி. பாரதி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image

புதிய பாலத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்டோா்.

Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

கொள்ளிடம் ஒன்றியத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்ட கட்டடங்களை எம்எல்ஏ பி.வி. பாரதி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

உமையாள்பதி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பேருந்து நிறுத்த நிழலகம், வினாயகக்குடியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழலகம், கடவாசல் ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழலகம் ஆகியவற்றை எம்எல்ஏ பி.வி. பாரதி திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம். நற்குணன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, வடகால் ஊராட்சியில் தேசிய ஊரகவேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம், திருமுல்லைவாசல் ஊராட்சியில் ரூ.19.72 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஆகியவற்றையும் எம்எல்ஏ பி.வி. பாரதி திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆா் இளைஞரணி தலைவா் ராஜேந்திரன், ஒன்றிய ஜெ.பேரவை துணை செயலாளா் சொக்கலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராணிசேகா், ஊராட்சித் தலைவா்கள் பரிமளாதமிழ்செல்வன், லெனின், கடவாசல் ஊராட்சி செயலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.