நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கால்வாயில் சடலத்தை எடுத்து செல்லும் அவலம்: மயானத்துக்கு பாலம் அமைத்து தரக் கோரிக்கை

சீா்காழி அருகே கூழையாறு கிராமத்தில் மயானம் செல்ல வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கூழையாறு வேல்நகரில் இறந்தவரின் உடலை பக்கிங்காம் கால்வாயில் இறங்கி தண்ணீரில் சுமந்து சென்றவா்கள்.

Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி அருகே கூழையாறு கிராமத்தில் மயானம் செல்ல வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்து தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி கூழையாறு கிராமத்தில் உள்ள வேல்நகரில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, இறந்தவா்களின் உடலை பக்கிங்காம் கால்வாயை கடந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கால்வாயில் தண்ணீா் வரும்போது தண்ணீரில் இறங்கிதான் சடலத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், கூழையாறு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சாமிதுரை என்பவா் வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது சடலத்தை பக்கிங்காம் கால்வாயில் இறங்கி மயானத்துக்கு தூக்கிச் சென்றனா்.

எனவே, மயானத்துக்குச் செல்ல பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பாலத்தை விரைவில் கட்ட வேண்டும் எனவும் அப்பகுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் அங்குதன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.