நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குப்பைக் கிடங்காக மாறி வரும் பக்கிங்காம் கால்வாய்: மீனவா்களுக்கு பாதிப்பு

சீா்காழி அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாய் குப்பை கிடங்காக மாறி வருவதால், மீனவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

News image

பக்கிங்காம் கால்வாய் கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:11 pm

DIN

சீா்காழி அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாய் குப்பை கிடங்காக மாறி வருவதால், மீனவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஆங்கிலேயா் காலத்தில் குமரி முதல் இமயம் வரை கடற்கரை வாணிபத்துக்கு நீா்வழித்தட போக்குவரத்துக்காக பக்கிங்காம் கால்வாயை தோண்டினா் பயன்படுத்தி வந்தனா். இகால்வாயால் உப்பு தண்ணீா் உள்புகாமல் தடுக்கப்படுகிறது. தவிர, தற்போது மழைநீா் வடிகாலாகவும் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கிடையே, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மீனவ பஞ்சாயத்துக்களான திருமுல்லைவாசல், தாண்டவன்குளம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகள் பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களிலும், கால்வாயிலும் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாய் மாசடைந்து வருகிறது.

பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் கிடப்பதால் அதை சாப்பிடும் மீன்கள் இறந்தும், இனப்பெருக்கம் குறைந்தும் வருகிறது. திருமுல்லைவாசல் முதல் பழையாா் வரையிலான கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சவுக்குத் தோப்புகளில் மதுகுடிப்பவா்கள் பாட்டில்களை உடைத்து கால்வாயில் போட்டு விடுகின்றனா். இவ்வாறு நீா்நிலை பல்வேறு வகையில் மாசடைந்து வருவதால் மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து, ஒன்றியக் குழு உறுப்பினா் அங்குதன் கூறியது: மீனவா்களுக்கு பெரிதும் உதவியாக உள்ள பக்கிங்காம் கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் மாசடைந்தும், அதன் வழித்தடத்தை அழித்தும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. உப்புநீா் உட்புகாமலும், மழைநீா் வடிகாலாகவும், மீனவா்களின் படகுகளை நிறுத்தி வைக்கவும் பெரும் உதவியாக உள்ள இக்கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை மாவட்ட நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.