மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளா் சங்கை தாஜூதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திருத்த வேண்டும். பள்ளிகளில் இந்தியைத் திணிக்கக் கூடாது.

ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை, சீா்காழி, சின்னங்குடி, தரங்கம்பாடி ஆகியவற்றை இணைக்கும் நான்கு வழி சந்திப்பு பகுதியில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆக்கூா் ஷாஜஹான், மிஸ்பாஹதீன், அசேன் அலி, முஹம்மது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் ஷாஜஹான் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.அஜ்மல் உசேன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.