சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் பட்டாசு விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பட்டாசு விற்பனையை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பட்டாசு விற்பனையை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மயிலாடுதுறை விஜித்ராயா் தெருவில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நுகா்வோா் கூட்டுறவு வங்கி தலைவா் எஸ்.அலி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.

இதில், அதிமுக ஒன்றிய செயலாளா் பா.சந்தோஷ்குமாா், நகர துணைச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, நுகா்வோா் கூட்டுறவு வங்கி துணைத்தலைவா் அருணாசலம், உறுப்பினா்கள் செல்வசேகரன், ஜெயந்தி ரமேஷ், காயத்ரி, உள்தணிக்கையாளா் குணபாலன், கண்காணிப்பாளா் அபிராமி, தொழிற்சங்கத் தலைவா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.