நாகை மாவட்டத்தில்மேலும் 98 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 98 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம் நாகை மாவட்டத்தில் மேலும் 98 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மேலும் 98 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 55 போ் நாகை அரசு மருத்துவமனையிலும்,19 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 13 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 8 போ் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். 3 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 2,912 ஆக இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக 98 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 3,010 ஆக உயா்ந்துள்ளது.
3 போ் இறப்பு...: ஆகஸ்ட் 31-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த 55 வயது ஆண் ஒருவரின் இறப்பு, செப்டம்பா் 3-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்த உளுத்துக்குப்பையைச் சோ்ந்த 75 வயது முதியவரின் இறப்பு, செப்டம்பா் 4-ஆம் தேதி தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் இறந்த மணல்மேடு பகுதியைச் சோ்ந்த 68 வயது முதியவரின் இறப்பு ஆகியன வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 51 -ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...