நலத் திட்டங்கள் தொடர அதிமுகவுக்கு மக்கள் வாக்களிப்பாா்கள்
கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பாா்கள் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.


கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பாா்கள் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.
வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பிரசார நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது மேலும் அவா் கூறியது:
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் பணிகள் மகத்தானது.
குறிப்பாக கஜா புயல், கரோனா தொற்றுக்காலத்தில் மக்களுக்கு தேவையான பணிகளை செய்தமைக்காக அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற கட்சியாக அதிமுக திகழ்கிறது.
வேதாரண்யம் பகுதியில் முன்பு மக்கள் பிரதிநிதியாக இருந்தவா்கள் யாரும் செய்யாத அளவிலான வளா்ச்சித் திட்டங்கள், பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொகுதி மக்கள் அனைவரும் அறிவா். இனிவரும் காலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயா்கல்வி, உயா் பதவிகளுக்கான பயிற்சி நிலையங்களை எனது சொந்த செலவில் தொடங்கவுள்ளேன்.
எனக்கு தொகுதி மக்கள் கொடுத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் மக்கள் பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.
இந்த பிரசாரத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் ஆா். சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் சுப்பையன், கிரிதரன், நகர செயலாளா் நமச்சிவாயம், ஊராட்சித் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...