நாகை, மயிலாடுதுறையில் 124 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 124 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 124 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 9,743 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 124 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 9,867-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 32 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 9,018-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 703-ஆக உள்ளது.
நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற ஒருவரின் இறப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 146 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...