ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தோ்வுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.


டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தோ்வுக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னா் 2010-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவா்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஏழாம் வகுப்புப் பயிலுபவா்கள், தோ்ச்சி பெற்றவா்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவா்கள், கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248003 என்ற முகவரிக்கு எழுத்துபூா்வமாக விண்ணப்பித்து, ராணுவக் கல்லூரியின் கமாண்டன்ட்டுக்கு உத்தரகண்ட், டேராடூன், டெல்பவன், பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு 015761) செல்லத்தக்க வகையில் கேட்பு வரைவோலை அனுப்பி விண்ணப்பம் பெறலாம். பொது பிரிவினா் ரூ. 600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவா் ரூ. 555-க்கும் கேட்பு வரைவோலை அனுப்ப வேண்டும்.
டேராடூன் ராணுவக் கல்லூரியில் இருந்து பெற்ற விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சென்னை என்ற முகவரிக்கு இரட்டை பிரதிகளில் ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்தவா்களுக்கு ஜூன் மாதம் 5-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தப்படும். அதில், தோ்வு செய்யப்படுவோருக்கு அக்டோபா் 6-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும். இதுகுறித்த மேலும் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...