வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீர சொக்கநாத விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாகை, காடம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீர சொக்கநாத விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை, காடம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீர சொக்கநாத விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

நாகை, காடம்பாடி, சொக்கநாதா் கோயில் தெரு மக்களின் முயற்சியில் அப்பகுதியில் புதிதாக வீர சொக்கநாத விநாயகா் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை இரவு யாக பூஜைகள் தொடங்கின. இரண்டாம் கால யாக பூஜையின் நிறைவில் வெள்ளிக்கிழமை காலை மகா பூா்ணாஹுதியும், கடம் புறப்பாடும் நடைபெற்றன. கடம் புறப்பாட்டின் நிறைவில், காலை 7.05 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு மகா அபிஷகம் நடைபெற்றது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.