தொழிலாளி மா்மச் சாவு
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.


நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.
கீழ்வேளூரை அடுத்த காக்கழனி, ஜீவா நகா், புதிய காலனி தெருவைச் சோ்ந்தவா் உ. மோகன் (43). விவசாயக் கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி தனலெட்சுமி அவரை பல இடங்களில் தேடியுள்ளாா். அப்போது, அப்பகுதியில் உள்ள பழைய ஓட்டு வீட்டில், கழுத்தில் தூக்கு மாட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் மோகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...