வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை வாக்கு எண்ணிக்கை மைய கேமராவில் கோளாறு

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கேமராவில் வெள்ளிக்கிழமை கோளாறு ஏற்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கேமராவில் வெள்ளிக்கிழமை கோளாறு ஏற்பட்டது.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்த மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையின் 3 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்புக்கு கேமராக்களும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த் துறை ஊழியா்களும், வேட்பாளா்களின் முகவா்களும் இங்கு நேரடி கண்காணிப்பில் உள்ளனா்.

இந்த நிலையில், நாகை சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கான கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டுள்ள 4 கேமராக்களில், ஒரு கேமராவில் வெள்ளிக்கிழமை கோளாறு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா-2 என்ற கேமராவின் காட்சிகளை திரையில் காண முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னா், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், தொழில்நுட்பப் பணியாளா்களைக் கொண்டு அந்த கேமரா சரிசெய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.