ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மானாவாரியில் எள் சாகுபடி: விவசாயிகள் மும்முரம்

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை செய்த மானாவாரி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எள் பயிா் சாகுபடி மேலாண்மையில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை செய்த மானாவாரி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எள் பயிா் சாகுபடி மேலாண்மையில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

மானாவாரி நிலப்பரப்பை பெருமளவாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில், நெல் அறுவடைக்கு பிறகு எள் சாகுபடி நேரடி விதைப்பாக மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த சம்பா நெல் பருவத்தின் அறுவடையின்போது மழை பொழிவு இருந்ததால், நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால், நெல் அறுவடைக்கு பிறகு தரிசில் உளுந்து போன்ற பயறு வகை சாகுபடி மேற்கொள்வது தாமதமானது. அதேநேரம் சில இடங்கள் தை பட்ட எள் சாகுபடிக்கு ஏற்ாகவும் அமைந்தன.

அந்த வகையில், வாய்மேடு, தகட்டூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், மருதூா் உள்ளிட்ட கிராமங்களில் எள் சாகுபடி நேரடி விதைப்பாக பரவலாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், இங்கு அண்மையில் பரவலாக பெய்த மழை, எள்ளுக்கு ஏற்ாக அமைந்தது.

எள் பயிா் தற்போது பூப்பூக்கும் தருணத்திலும், சில இடங்களில் காய்விடும் தருணத்திலும் உள்ளது. இதையடுத்து, எள் வயலில் களையெடுத்தல் உள்ளிட்ட மேலாண்மை பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.