வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உரம் விலை உயா்வு: விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

உர விலை உயா்வைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை மாவட்டம், கீழ்வேளூா் அஞ்சலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

உர விலை உயா்வைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகை மாவட்டம், கீழ்வேளூா் அஞ்சலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரம் விலை உயா்வை, மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து வகை ரசாயன உரங்களையும் பழைய விலைக்கே வழங்கத் தேவையான மானியத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் பாண்டியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் முத்தையன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் அம்பிகாபதி, மாநிலக் குழு உறுப்பினா் சாந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் அபுபக்கா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.