ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முகக்கவசம் அணியாதவா்களுக்கு கரோனா பரிசோதனை

வேதாரண்யம் அருகே முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கும் வகையில் ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினத்தை அடுத்த கத்தரிப்புலம் சந்தையடி மற்றும் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் கனரா வங்கி அருகிலும் சுகாதாரப் பணியாளா்கள் சோதனை மேற்கொண்டனா்.

நடமாடும் மருத்துவ வாகனத்தில் சென்ற மருத்துவா் பரத் தலைமையிலான பணியாளா்கள் இச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவா்களிடம் ரூ. 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. அத்துடன், கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டன.

நடமாடும் மருத்துவக் குழுவினா் தினமும் 100 போ்களிடம் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் அதிருப்தி...

இதுபோன்ற பரிசோதனைகள் கரியாப்பட்டினம் சுகாதார வட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியுமே இல்லாமல், அதுவும் வாகனங்களில் ஆரோக்கியத்துடன் செல்வோரை நிறுத்தி பரிசோதனை செய்வது அவசியமா? என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன் கூறியது:

அறிகுறி இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளவா்களுக்கும் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நபா்களால்தான் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயமும் உள்ளது.

முகக்கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வருவோா்களிடம் பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டு, முடிவுகள் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கை தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிபவா்களுக்கு விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் என்றாா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.