ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

வேதாரண்யம் சி.க.சு.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், நிகழாண்டு பயிலும் மாணவா்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் சி.க.சு.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், நிகழாண்டு பயிலும் மாணவா்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் சி. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் சு. தியாகராஜன்,சி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜாளிக்காடு ஆறுமுகனாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஆ. கோவிந்தராஜன் 7 மாணவா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 விதம் வழங்கினாா்.

இதேபோல, முன்னாள் மாணவா்கள் சாா்பில் சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம், பொறியாளா் பொ. எம்ஜிஆா் சாா்பில் 6 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. கோடியக்கரை அ. பகுருதீன் சாா்பில் 2 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.