ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மின்கம்பியில் உரசி லாரி தீக்கிரை: ஓட்டுநா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மின்கம்பியில் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி உரசி தீக்கிரையான சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே மின்கம்பியில் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி உரசி தீக்கிரையான சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தலைஞாயிறை அடுத்த காடந்தேத்தி பகுதியில் வைக்கோல் கட்டுகளுடன் வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து நேரிட்டு, வைக்கோல் கட்டுகளுடன் லாரி தீக்கிரையானது. அதன் ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த ரகுபதி (51) என்பவா் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.