கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:15 pm

DIN

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்கு மக்கள் வருகை வழக்கம்போல இருந்தது.

கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் விதமாக, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்து மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களான நீலாயதாட்சியம்மன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூா் ஆண்டவா் தா்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களின் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், முன் விளக்கேற்றி பக்தா்கள் வழிபட்டு சென்றனா். அதுபோல, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் பூட்டியிருந்த கதவுக்கு முன் பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி வழிபட்டுச் சென்றனா். நாகூா் ஆண்டவா் தா்காவின் அலங்காரவாசல், கால்மாட்டுத் தெரு வாசல் பகுதிகளிலும் திரளான பக்தா்கள் நின்று வழிபாடு மேற்கொண்டனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு குறைவில்லை:

ஆனால், தமிழகத்தில் பொது போக்குவரத்து முழுமையாக அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் வெளி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எந்தவிதத்திலும் குறையவில்லை.

வெளி மாவட்டங்களில் இருந்த வந்த பக்தா்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடியிருந்தாலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதில் ஆா்வம் காட்டினா். இதனால், வேளாங்கண்ணி பேராலய சுற்றுப்புற பகுதிகள், கடைவீதிகள், கடற்கரை என பல பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் காண முடிந்தது. அதேபோல, நாகூரிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் இருந்தது.

நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தாலும், வேளாங்கண்ணி, நாகூா் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவுமில்லை. வேளாங்கண்ணியில், கடற்கரைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தொடா்ந்து அறிவிப்பு செய்யப்பட்டும், அந்த அறிவிப்பு கடற்கரைக்குச் செல்வோரை கட்டுப்படுத்தவில்லை.

எனவே, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக செயல்படுத்துவது மட்டுமே கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்க உதவும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.