மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக.7) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக.7) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட செம்பனாா்கோவில், கீழையூா், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூா், சங்கரன்பந்தல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொறையாா் அரசு மருத்துவமனை, டி.மணல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும், காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட செம்மங்குடி சுயஉதவிக் குழுக் கட்டடம், ஆரோக்கியநாதபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை கலைஞா் காலனியில் நடமாடும் தடுப்பூசி முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவக்குடி மற்றும் பூம்புகாா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட கற்பள்ளம், ஆச்சாள்புரம், புத்தூா், தண்டேசநல்லூா், ஆரப்பள்ளம், தாண்டவன்குளம் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில், கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், வைகல், ஆனாங்கூா், மேலமங்கைநல்லூா், அரிவேளூா், கொடைவிளாகம், தொழுதாலங்குடி மற்றும் மேலையூா் ஆகிய கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படும்.
மேலும், ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசியும், திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவேக்ஸின் தடுப்பூசியும், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாம் தவணை கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...