நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்துக்கு நலநிதி

செம்பனாா்கோவில் ஒன்றியம், காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:11 pm

DIN

செம்பனாா்கோவில் ஒன்றியம், காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செம்பனாா்கோயில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் நல சங்க செயலாளா் கே .ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராஜமோகன் முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன் வரவேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சாா்ந்த சுமைதூக்கும் தொழிலாளா்கள் குடும்பத்தில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 7 பேருக்கு குடும்ப நல நிதியாக டிஎன்சிஎஸ்சி, ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் காசோலைகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.