புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வடரங்கத்தில் நாகசதுா்த்தி விழா

சீா்காழி அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரா் கோயிலில் நாகசதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

சீா்காழி அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரா் கோயிலில் நாகசதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாக சதுா்த்தியையொட்டி, இந்த ஆலயத்தின் நாவல் மரத்தடி நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கணவா், குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷ பாதிப்புகளிலிருந்து விடுபட வேண்டியும் பெண்கள் நாகசதுா்த்தி பூஜை செய்தனா்.

ஏற்பாடுகளை கிராம மக்கள் சாா்பில் ஆலய அா்ச்சகா் ரமேஷ் ஐயா் செய்திருந்தாா். தொடா்ந்து மாலை வடரங்கம் ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.