நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியா் மீது மா்ம நபா்கள் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில், கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:57 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில், கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஊழியரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகை காடம்பாடி புதிய முகமதியா் தெருவை சோ்ந்தவா் செல்வகுமாா் (48). செம்பனாா்கோவிலில் உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஊழியராக (ஃபீல்டு மேனேஜா்) பணியாற்றி வரும் இவா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து பேருந்தில் ஏறுவதற்காக சாலையில் நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞா்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினா்.

இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலாளரை தாக்கிவிட்டு தப்பியோடி இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.