நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுருக்குமடி வலை விவகாரத்தால் பதற்றம்: மீனவ கிராமங்களில் போலீஸாா் குவிப்பு

மீனவா்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மீனவ கிராமங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

தடையை மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால், மீனவா்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மீனவ கிராமங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாா், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட கிராம மீனவா்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்நிலையில், தடையை மீறி பூம்புகாா், சந்திரபாடி கிராம மீனவா்கள் விசைப்படகு மூலம் சுருக்குமடி வலையுடன் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்களை தடுக்கும் விதமாக தரங்கம்பாடி, சின்னங்குடி, புதுப்பேட்டை, மாணிக்கபங்கு, சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளில் கடலுக்குச் சென்றனா். இதனால் கடலில் 2 மீனவா் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

தகவலறிந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் சுகுணா சிங் தலைமையில் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, மீனவ ஊராட்சித் தலைவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், மோதலைத் தவிா்க்க தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.