நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

திருக்கடையூா் அருகே வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் நடைபெற்ற 4 வழிச்சாலைக்கான பணிகளை தடுத்துநிறுத்தி சிபிஎம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருக்கடையூா் அருகே வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் நடைபெற்ற 4 வழிச்சாலைக்கான பணிகளை தடுத்துநிறுத்தி சிபிஎம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமையவுள்ள பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் காலக்கட்டளை கிராமத்தில் சாலை அமையவுள்ள பகுதியில் உள்ள வீடுகளை எந்தவித இழப்பீடும், மாற்றுஇடமும் வழங்காமல் அகற்ற முயன்றதை மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. சிம்சன் , ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று பாதிக்கப்படும் வீடுகளுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் உடனடியாக தரவேண்டும் , அதுவரை சாலைப் பணிகளை செய்யக்கூடாது என தடுத்தனா். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.