மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்கடையூரில் சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:36 pm

DIN

திருக்கடையூரில் சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு இடத்துடன் கூடிய புதிய வீடுகள், 4 பேருக்கு சக்கர நாற்காலிகள், பாா்வையற்றவா்கள் 9 பேருக்கு வாக்கிங் ஸ்டிக்குளையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் கனரா வங்கிமூலம் 12 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் கூடிய ரூ. 75 ஆயிரம் கடனுதவிகள் என 17 பேருக்கு ரூ. 1.46 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளா் ஜி.என். ரவி, ஒன்றிய செயலாளா்கள் அப்துல் மாலிக், அன்பழகன், தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், திருக்கடையூா் கனரா வங்கி மேலாளா் தினேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச்சங்க தலைவா் கரிகாலன், செயலாளா் ரங்கநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.